டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும்; திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

21 Jul, 2021 | 12:56 PM
image

(க.கிஷாந்தன்)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டனில் புட்சிட்டிக்கு முன்பாக இன்று காலை 11.00 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தலைமையேற்றார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று, நீதிக்காக குரல் எழுப்பினர்.

"டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும், இது விடயத்தில் சட்டம் உரிய வகையில் செயற்பட வேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்." என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதோடு, பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அத்துடன், மலையகத்திலிருந்து சிறார்களை எவரும் வேலைக்கு அமர்த்தக்கூடாது, அவர்களுக்கான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட...

2026-04-11 13:52:20
news-image

பெரிய புல்லுமலையில் புதையல் தோண்டிய விசேட...

2026-04-11 14:08:23
news-image

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும்...

2026-04-11 13:55:09
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: நாடளாவிய ரீதியில்...

2026-04-11 13:22:13
news-image

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த...

2026-04-11 13:37:56
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: 2009 முதல்...

2026-04-11 13:27:39
news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59