ஆட்டத்தின் பின் ஆடுகளத்தில் ஆர்தர் - சானக்கவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்

Published By: Vishnu

21 Jul, 2021 | 12:52 PM
image

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் பின்னர் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும், அணித் தலைவர் தசூன் சானக்கவும் ஆடுகளத்தில் கடும் வாக்குவாதததில் ஈடுபட்டனர்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகலிரிவு ஆட்டமாக இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை குவித்தது. பின்னர் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில்  வெற்றியை தனதாக்கியது.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 193 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபகரமான நிலையில் இருக்க, வெற்றியின் வாய்ப்பு இலங்கைக்கு அதிகளவில் காணப்பட்டது.

அதன் பின்னர் எட்டாவது விக்கெட்டுக்காக தீபக் சாஹர் மற்றும் புவேனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்து இலங்கையின் வெற்றிக் கனவை கலைத்தனர்.

இந் நிலையில் ஆட்டத்தின் முடிவுகளால் ஆத்திரமடைந்த மிக்கி ஆர்தர், ‍போட்டியின் பின்னர் இலங்கை அணித் தலைவருடன் ஆடுகளத்தில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இருவரும் ஆடுகளத்தில் என்ன வாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெரியராத நிலையில், களத்தடுப்பு மற்றும் பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய விதம் குறித்து ஆர்தர், சானக்கவுடன் அதிருப்தியை பகிர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது மாத்திரமன்றி ஆட்ட நேரத்தின்போது இலங்கை அணியினரின் ஒவ்வொரு மிஸ்ஃபீல்டிலும், தலைமை பயிற்சியாளர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார். 

கசூன் ரஜித்த, லக்ஷான் சந்தகன் ஆகியோர் அதிகமான ஓட்டங்களில் வாரி வழங்கிய நிலையில் அவர்களுக்கு தொடர்ச்சியான ஓவர்களை தசுன் சானக கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் குறைந்த ஓட்டங்களை வழங்கிய சமிக்க கருணாரத்ன மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோருக்கு தொடர்ச்சியாக பந்து வீசுவதற்கான வாய்ப்பினை அணித் தலைவர் வழங்கவில்லை.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்தை சாடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட், 

பயிற்சியாளருக்கும், அணித் தலைவருக்கும் இடையிலான அந்த வாதம் ஆடுகளத்தில் நடத்திருக்க கூடாது. மாறாக அவர்களது ஆடை ஆறையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22