சிங்கப்பூரில் 13 வயது பாடசாலை மாணவன் கோடாரியால் வெட்டி கொலை

21 Jul, 2021 | 01:27 PM
image

சிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.

சிங்கப்பூரில் மதிப்புமிக்க பாடசாலை ஒன்றாக அறியப்படும் ரிவர் வேலி பாடசாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. 

அப்போது மாணவர்கள் சிலர் பாடசாலையிலுள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு சக மாணவன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். 

இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும் மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த இரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பாடசாலையில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து பொலிஸார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம் குறித்து பொலிஸார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12