பிரபல இ-மெயில் தளமான ‘மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச்’ எனப்படும் சீன அரசின் உதவியோடு ஹேக்கர்கள் ‘ஹேக்’ செய்ததாகவும், இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் வல்லரசு குற்றம் சுமத்தியுள்ளன.

இது குறித்து நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து,  மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் சீனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சீனா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீன அரசாங்கம் இணைய பாதுகாப்பின் தீவிர பாதுகாவலராக விளங்குகிறது. எனவும், சீனா மீதான இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றது.‌ ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவது தீங்கிழைக்கும்” என‌வும் தெரிவித்துள்ளது.