ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை தொலைபேசி செயலிகள் மூலமாக வெளியிட்டதாகக் கூறி, பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பெப்ரவரி மாதம் மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஜூலை19 முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மும்பை போலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தட்கான், பாஷிகர், ஜான்வார் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார்.