பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்தை அறிவிப்பது தொடர்பாக தோகாவில் ஆப்கானிஸ்தான் அரச தரப்புக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு தொழுகை நடைபெற்றுள்ளது. குறித்த தொழுகையில், ஜனாதிபதி அஷ்ரப் கனி, அரசின் 2ஆவது சிரேஷ்ட அதிகாரியாக கருதப்படும் அப்துல்லா மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தத நிலையிலும், தொழுகை நடந்துகொண்டிருந்தபோது ஜனாதிபதி மாளிகையை குறிவைத்து பயங்கரவாதிகள் ரொக்கெட் குண்டுகளை வீசி எறியப்பட்டிருந்தது.
அவ்வாறு வீசியெறியப்பட்ட 3 ரொக்கெட் குண்டுகளும் ஜனாதிபதி மாளிகையின் எல்லை சுவருக்கு அருகில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தாக்குதலில், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று தீக்கிரையாகியுள்ள நிலையிலும், இத்தாக்குதலில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை தெரிவித்துள்ளது
இந்நிகழ்வில், ஜனாதிபதி அஷ்ரப் கனி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது,
தலிபான்களுக்கு அமைதிக்கான எண்ணமும் விருப்பமும் இல்லை. ஆனால் நமக்கு அமைதிக்கான நோக்கம் மற்றும் விருப்பம் உள்ளதையும், அதற்காக நாம் தியாகம் செய்துள்ளோம் என்பதையும் நாம் நிரூபித்துள்ளோம் என்றார். மேலும், இது பக்ரீத் ஆப்கானிஸ்தான் படைகளின் தியாகங்களையும், தைரியத்தையும் மதிக்கும் நாள் ஆகும் எனவும் நினைவுகூர்ந்தார்.
மேலும், நாம் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க 5,000 தலிபான் கைதிகளை விடுவித்தோம். ஆனால் இன்றுவரை தலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM