நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆவர்.

கடந்த வாரம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் சரசரியாக சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் பொறுப்பற்ற வாகன சாரதிகளை கைதுசெய்ய சிறப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.