இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 5 ஆவது  ஒருநாள் போட்டியில் ஆஸி அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்று தொடரை 4-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.2 ஓவர்களில்  195 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குணதிலக  39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 43 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 199 ஒட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆஸி அணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸி அணியின் டேவிட் வோர்னர் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடர் ஆட்டநாயகனாக ஜோர்ஜ் பெய்லி தெரிவுசெய்யப்பட்டார்.