(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நுவரெலியா டயகம தோட்டத்தை சேர்ந்த  ஹிசாலினி இம்மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் சந்தேகத்திற்கு இடமாக இடம்பெற்றுள்ள தீ விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். 

வரி அறவீட்டை ஏழை மக்களிடம் திணிக்கக்கூடாது - ராதாகிருஷ்ணன் | Virakesari.lk

இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணை நடத்தவேண்டும். அதுடன் இந்த வருடத்தில் மாத்திரம் இவ்வாறு 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.