(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அத்துடன் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்தால் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என கல்வி ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு அதற்குரிய பாடப்பரப்புகள் நிறைவடைந்திருக்கின்றதா?. 

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் எப்போது நிறைவடையும்? மணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன போன்ற கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.