(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எரிபொருள் விலையேற்றத்தை விடவும் பிரதானமாக பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றதெனவும், பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்ற அதே நேரத்தில் அமைச்சர் உதய கம்மன்பிலவின் இல்லத்தை புனரமைக்க 150 இலட்சங்கள் செலவழிப்பது இப்போது அவசியமா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய வேளையில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான எதிர்ப்புகள் முதலில் ஆளுந்தரப்புக்குள் இருந்தே எழுந்தன. குறிப்பாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் முதலில் இதனை கூறினார். பின்னர் ஆளுந்தரப்பு உறுபினர்களில் பலர் இதே நிலைப்பாட்டை தெரிவித்து வந்தனர். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை இயக்குவது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஆகவே அவர் மீதான எதிர்ப்பை ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் வெளிப்படுத்தி வந்துள்ளனர். அவ்வாறான நிலையில் இன்று ஆளுந்தரப்புக்குள் எழுந்த மாறுபட்ட கொள்கைகள் அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் ரீதியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு முட்டாள் தனமான செயற்பாடாகும்.
எனினும் எரிபொருள் விலையேற்றம் நாட்டின் சாதாரண மக்களை பாரிய அளவில் பாதித்துள்ளது. கடந்தகால வரலாறுகளை பார்த்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலாபத்தை ஈட்டிக்கொடுத்த பல நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளன. இன்று எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்தமாக அமைச்சர் கம்மன்பில மாத்திரமே காரணம் அல்ல, கடந்த காலங்களில் குறிப்பாக 1978 ஆம் ஆண்டில் இருந்து நாம் கையாண்டுள்ள பொருளாதார கொள்கையே இன்று நெருக்கடி நிலைமைக்கு காரணமாகும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த நேரத்தில் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் செயற்படவில்லை. அப்போதும் இதே கேள்வி எழுந்த நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்பட மாட்டாது எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான விலை நிர்ணய சபையை உருவாக்குவதாக கூறினர். இதனால் கிடைத்த பணத்தை என்ன செய்தனர். மக்களுக்கு சலுகைகளை கொடுக்காது கடன்களை செலுத்தியுள்ளதாக கூறுகின்றனர். அதேபோல் நாட்டில் எவ்வளவோ நெருக்கடி நிலைகள் உள்ளதாகவும் எரிபொருள் விலை அதிகரிப்பு பெரிய விடயம் இல்லை எனவும் அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு இருக்கையில் அமைச்சரின் இல்லத்தை புனரமைக்க 150 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கையில் அமைச்சர் வீட்டை புனரமைக்க இத்தனை இலட்சங்களை செலவழிக்க வேண்டுமா? இதற்கு அமைச்சர் கம்மன்பில பொறுப்புக்கூறியாக வேண்டும். எவ்வாறு இருப்பினும் எரிபொருள் விலையேற்ற பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் கம்மன்பில சென்றுள்ளார். அதேபோல் எரிபொருள் நிலையங்களை கைமாற்றும் சதிகளில் அமைச்சரும் ஈடுபட்டுள்ளார். அதைத்தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளரும் கூறியுள்ளார். அதேபோல் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரமும் அமைச்சர் கம்மன்பிலவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் கண்டிக்கின்றோம். ஆகவே இதன் காரணமாகவே நாம் இந்த பிரேரணையை ஆதரிக்கின்றோம் என்றார்.
- முகப்பு
- Local
- நாட்டின் நிதி நெருக்கடியில் கம்மன்பிலவின் வீட்டை புனரமைக்க 150 இலட்சம் செலவழிக்க வேண்டுமா?
நாட்டின் நிதி நெருக்கடியில் கம்மன்பிலவின் வீட்டை புனரமைக்க 150 இலட்சம் செலவழிக்க வேண்டுமா?
Published By: J.G.Stephan
20 Jul, 2021 | 03:59 PM

-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்றம் கலைக்கப்படுமா? அரசல் புரசலாக பேச்சு
10 Dec, 2023 | 02:24 PM
-
சிறப்புக் கட்டுரை
பாம்புகள் குடியிருக்கும் பாடசாலை கட்டடங்கள்!
07 Dec, 2023 | 06:33 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசுபொருளாகியுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களின்...
06 Dec, 2023 | 06:31 PM
-
சிறப்புக் கட்டுரை
மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள்
06 Dec, 2023 | 05:28 PM
-
சிறப்புக் கட்டுரை
குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுடன் பதில் பொலிஸ்மா அதிபராகிய...
04 Dec, 2023 | 10:03 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுடன் பேசினீர்களா?...
03 Dec, 2023 | 01:39 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...
2023-12-11 17:59:32

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...
2023-12-11 17:44:17

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...
2023-12-11 16:58:39

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...
2023-12-11 16:59:13

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
2023-12-11 17:08:33

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை
2023-12-11 17:06:33

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...
2023-12-11 16:00:40

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது
2023-12-11 15:57:02

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...
2023-12-11 16:03:35

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...
2023-12-11 15:20:09

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...
2023-12-11 15:19:19

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM