கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிடைக்கப்பெற்ற பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (19.07.2021) பிற்பகல் தெபருவ மற்றும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டில் இந்த உபகரணத் தொகுதி வழங்கிவைக்கப்பட்டது.
தெபருவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வசந்த விஜேவீர மற்றும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் வருகைத்தந்த எம்.எம்.சீ.கயான் ஆகியோர் குறியீட்டு ரீதியாக பிரதமரிடமிருந்து மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்டனர்.
முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அண்மையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அவ்வாறு கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களின் ஒரு தொகுதியே இவ்வாறு தெபருவ மற்றும் வலஸ்முல்ல வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தக்கூடிய வென்டிலேட்டர் (Ventilators), ஒக்சிஜன் கருவிகள்(Oxygen therapy), பீ.பீ.ஈ. (PPE) கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதில் உள்ளடங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM