கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம்(19.07.2021) கொரோனா தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
தொற்றாளர்களில், ஏனையோர் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர், பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 80 பேருக்கு மேற்பட்டோர், கொரோனா தொற்றாளர்களாக மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM