சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.