பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் வீட்டில் மரணமான சிறுமியின் மரணம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றி வந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  15ஆம் திகதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாலியல் ரீதியாக அச்சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் மரண அறிக்கையில் வழங்கப்பட்டு இருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு நீதியான விசாரணை வேண்டும் எனவும், இது கொலையா? அல்லது தற்கொலையா? என தீர விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்  இராசையா விக்டர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.