பாகிஸ்தானில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாகணத்தில் உள்ள தேரா காசி கான் என்ற இடத்தில் பக்ரீத்தைக் கொண்டாட தொழிலாளர்கள் பஸ் ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

அந்தப் பஸ்  சியால்கோட் என்ற இடத்திலிருந்து ராஜன்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லொறியுடன் மோதி வீதியோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இந்த விபத்து நிகழ்விடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அடுத்தடுத்து சிலர் மரணித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.