(எம்.மனோசித்ரா)

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து வெளியான பல செய்திகள் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும்  கூறுகையில், 

தமிழகத்தின் - தூத்துக்குடியை அண்மித்த கடல் பகுதியில் இந்திய   நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டமை குறித்து ஊடகங்கள் எழுப்பியது.

சில அறிக்கைகள் பலவும் ஊகங்களை அடிப்படையாக கொண்டவையாகும். இந்திய கடற்படையுடன்  சம்பந்தப்பட்ட மற்றும் இதுபோன்ற செயல்பாட்டு விஷயங்களில் உயர் ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பதில்லை. 

எவ்வாறாயினும், நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது பிற தேசிய சொத்துக்களை இந்தியா பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களாகும் என்றார்.