கொழும்பிலிருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் விமானங்கள் ஜூலை 26 முதல் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரால் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரிற்கு பயணித்த பயணிகளில் ஆறு பேர் ஜூலை 6 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்தே MU232 விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மே 1 முதல், சர்வதேச விமானங்களில் கொவிட்-19 இடைநீக்க விதிகளை சீன விமான நிர்வாகம் சற்று தளர்த்தியுள்ளது.

சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் ஜூன் 2020 இல் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான இடைநீக்க விதிகளை அறிமுகப்படுத்தியது.

மேலும் கொவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த டிசம்பரில் அதன் கொள்கையை புதுப்பித்தது.

அதற்கு அமைவாக வைரஸ் தொற்றுக்கு நேர்மறையை சோதிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஐந்தை எட்டினால் விமான இடைநீக்கம் ஒரு வாரம் முதல் இரண்டு வரை நீட்டிக்கப்படும். எண் 10 ஐ அடைந்தால் இடைநீக்கம் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்.

ஒரு விமானத்தின் உள்வரும் பயணிகள் அனைவரும் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் எதிர்மறையாக சோதனை செய்தால், விமானங்களை வாரத்திற்கு இரண்டாக அதிகரிக்கவும் அது அனுமதிக்கிறது.