(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பெருந்தோட்ட கம்பனி உரிமையாளர்களின் காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தினால் மலையக மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் வாழ்வாத கஷ்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் நிவாரணம் என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென  விரும்புகின்றீர்களா? ;வடிவேல் சுரேஷ் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் (19) திங்கட்கிழமை அமைச்சர் உதய கம்பன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.