உலகில் தலை சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக மக்கள் வங்கி மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளது

Published By: Digital Desk 2

19 Jul, 2021 | 05:30 PM
image

இங்கிலாந்தின் The Banker Magazine இனால் தொடர்ந்தும் நான்காவது ஆண்டிலும் மக்கள் வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக பெயர்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் Financial Times இனால் வெளியிடப்படும் இவ்விதழானது முதன்மையான வங்கிகளை அவற்றின் மூலதன அடுக்கு ஒன்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. அதே போல் நாட்டின் மிகப் பெரிய வங்கிகளுள் உயர்ந்த பங்கு வருவாயையும் மக்கள் வங்கி அடைந்துள்ளது. 

இவ்விஷேடமான தருணத்தில் மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,

'கொவிட் 19 பெருந்தொற்றின் மத்தியிலும் இத்தரத்தினைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தமையானது எவ்வாறான சவாலான சூழ்நிலையிலும் எதனையும் தாங்கும் திறன் மக்கள் வங்கிக்கு உண்டென்பதை புலப்படுத்துகிறது. எமது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் அவர்கள் எம்மீதும், எமது ஊழியர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.' எனத் தெரிவித்தார்

மக்கள் வங்கி 2021ஆம் ஆண்டில் தமது 60ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது. தற்போதைய கொவிட் 19 பெருந்தொற்றின் போதும் அதன் கிளை வலையமைப்பில் 70மூ க்கும் அதிகமான கிளைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக திறந்து வைத்திருந்ததுடன்; ரூ.800 பில்லியனுக்கும் அதிகமான நிதி நிவாரணங்களை தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் வழங்கியது.

மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளரான திரு. ரஞ்சித் கொடிதுவக்கு இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், 

'தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இந்த தரவரிசையை எட்டியமைக்கு மட்டும் நாம் பெருமையடைய முடியாது. இது நமது தேசத்துக்கும் எமது மக்களுக்கும் எமது உறுதிப்பாட்டிற்கும் ஒரு உண்மையான சான்றாகும். எதிர்காலத்தில் மேலும் வலிமையடைய எதிர்ப்பார்க்கின்றோம்.' எனத் தெரிவித்தார். 

மக்கள் வங்கி இலங்கையில் டிஜிட்டல் வங்கிப் பிரிவில் முன்னணி வகிக்கிறது. இது கிராமப்புறங்களில் டிஜிட்டல் நிதி ஊடுருவலை எளிதாக்கியது. அத்தோடு நாடுகளின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை ஆதரிப்பதில் ஒப்பற்ற வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

 அதே போல் மக்கள் வங்கி தமது பயணத்தில் இன்னும் பல விருதுகளை சுவீகரித்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் மட்டும் Asian Banker Excellence in Retail Financial Services Award, Asia Money Best Bank, World Finance, International Business Magazine போன்ற விருது வழங்கும் வைபவங்களில் மக்கள் வங்கி விஷேட விருதுகளையும் வென்றுள்ளது. இதற்கு மேலதிகமாக The Banker சஞ்சிகையினால் 2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மக்கள் வங்கி உலகின் சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக இடம்பிடித்திருந்தது. 

மேலும் இலங்கையின் சர்வதேச வர்த்தக சபை, பட்டயக் கணக்காளர் நிறுவகம் மற்றும் Daily FT சஞ்ஜிகை ஆகியோரால் 2020, 2019 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தும் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பெருமைமிகு 10 நிறுவனங்களுள் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மக்கள் வங்கியானது இலங்கையில் அனுமதிபெற்ற மிகப் பெரிய வணிக வங்கியாகும். இது நாடு முழுவதும் 741 கிளைகளையும் சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது.  60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள மக்கள் வங்கி 14 மில்லியனுக்கும் அதிகமான மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் 19 மில்லியன் அளவிலான கணக்குரிமையாளர்களையும், 8000க்கும் அதிகமான ஊழியர்களையும்; கொண்டு இலங்கையில் மிகப் பெரிய நிதிச் சேவை வழங்குனர்களாக திகழ்கின்றனர்.  

அதே போல் மக்கள் வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு நவீன உலகுக்கு ஏற்ற வகையிலான மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கிசேவைகளைப் பெற்றுக் கொடுத்திடும் நோக்கத்துடன் 2015ஆம் ஆண்டு டிஜிட்டல் வங்கிச்சேவைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

 பல்வேறுபட்ட டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் வாடிக்கையாளர்களுடனான வங்கியின் தொடர்புகளின் ஒவ்வொரு கட்டத்திலும் மேம்பட்ட வசதி, வேகம் மற்றும் வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்கி வருகிறது. சர்வதேச தரப்படுத்தல்களில் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவத்திற்காக ISO/IEC 27001:2013 தரச்சான்றிதழினைப் பெற்றுள்ளது. இச்சான்றிதழைப்பெற்ற இலங்கையின் முதலாவதும், ஒரே வங்கியாகவும் மக்கள் வங்கி விளங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57