கார்வண்ணன்

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பன மோசமான நிலையில்இருப்பதாக, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் அறிக்கை வெளியாகியிருக்கும்இந்தச் சந்தர்ப்பத்தில், நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல்சட்டங்கள் என்பனவற்றைக் கொண்டு ஜனநாயக ரீதியான உரிமைகளையும், சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துகின்ற ஒருவித சர்வாதிகாரத்தனம் நாட்டில் மேலோங்கியுள்ளது.

ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், முன்னிலை சோசலிச கட்சியின்துமிந்த நாகமுவ உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள், அரசியல் மற்றும் சிவில்செயற்பாட்டாளர்கள், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளமை, தற்போதையநிலைமை மோசமடைந்து செல்வதற்குப் போதுமான உதாரணமாக அமைந்திருக்கிறது.

அரசாங்கத்தின் போக்கையும், ஜனநாயக விரோத செயற்பாடுகளையும்கண்டித்தும், உரிமைகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

அதன் ஒரு கட்டம் தான் இவர்களுக்கான இந்த தனிமைப்படுத்தல்.

இவர்களை விடுவிக்க கோரி தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதும், ஆசிரியர்கள் இணைய வழிக் கற்பித்தலை நிறுத்தியுள்ள போதும்,தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.