(நா.தனுஜா)
ஜனநாயகத்திற்கு விரோதமான  செயற்பாடுகளில்  ஈடுபட்டுவரும்  தற்போதைய  அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் (செவ்வாய்கிழமை) பாராளுமன்ற அமர்வுகள் நிறைவடையும்போது தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

'எரிபொருள் விலையை  உயர்த்திய உதய கம்மன்பிலவை  வெளியேற்றுவோம். நிவாரணத்தைக் குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில்  ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.