(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)  

எதிர்கட்சியின் கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவரின் வீட்டில் 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார், உயிரிழக்க முன்னர் சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் கூறப்படுகின்றது.

இது குறித்து எதிர்க்கட்சியில் ஒருவரேனும் வாய் திறக்காது மௌனம் காப்பது ஏனென இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

16 பேர் கொண்ட குழுவுக்கு இடமில்லை - காஞ்சன விஜேசேகர | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.