வேண்டாப் பங்காளிகள்

By Digital Desk 2

19 Jul, 2021 | 04:03 PM
image

சத்ரியன்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சியில் அமர வைத்த பங்காளிக் கட்சிகளும், தலைவர்களும் இப்போது விழிபிதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

அரசாங்கத்தில்அவர்களுக்கான மதிப்பு குறைந்து வருவது தான் அதற்குக் காரணம்.

2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து,தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்துக்குச் சென்று விட்ட மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும், அழைத்து வந்து, அதிகாரத்துக்கு கொண்டு வருவதில் பங்காளிக் கட்சிகளின் பங்கு சற்றும் குறைந்ததல்ல.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கவும் விரும்பாமல், வெளியேறவும் முடியாமல் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது ஆதரவாளர்களும் தவித்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கான மேடையை அமைத்துக் கொடுத்து மீள் எழுச்சிக்கான பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பங்காளிகள் தான்.

அதற்குப் பின்னர் தான் பஷில் ராஜபக்ஷவின் மூலம், பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டது.

பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் பெரிய அரசியல் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அதற்கு முக்கியமான காரணியாக இருந்தவை பங்காளிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, போன்றவர்களின்உழைப்பின் மீது தான் பொதுஜன பெரமுன கட்டியெழுப்பப்பட்டது.

அதிலும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் பங்கு மிக அதிகமானது.

இப்போது, பொதுஜன பெரமுன வளர்ந்து விட்டது. ஆட்சியை கைப்பற்றி, அதிகாரத்தை அனுபவிக்கிறது. அதேவேளை, பங்காளிகள் இப்போது வேண்டப்படாதவர்களாகமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right