இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுப்பட்ட  பதினெட்டு சீன பிரஜைகள் மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இவ்வாறான மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சம் மலேசிய ரிங்கிட் வரை மோசடி செய்துள்ளதாக கோலாலம்பூர்  பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசிய ரோயல் பொலிசார் மற்றும் கோலாலம்பூர் பொலிஸார் நடத்திய கூட்டு சோதனைகளின் போதே  இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்க தொலைப்பேசிகள் ,  கணினிகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் 1,26,000 மலேசிய ரிங்கிட்  பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவியல் அம்சம் மற்றும் குடிவரவு சட்டத்தின் விசாரணைகள் கோலாலம்பூர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில்  18 குறித்த  சீனர்களுக்கு எதிராக கடும் சட்டநமவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு  துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.