(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர் பிரதமராக இருந்து கொண்டு அரசியலமைப்புக்கு முரணான காரியாலயங்களை அமைத்துக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை கைது செய்தபோது சிறப்புரிமை தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து சிறப்பு கூற்றொன்றை முன்வைத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதைத்தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.