42 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சட்டமொன்றுக்கு எதிரான போராட்டம்

By Digital Desk 2

19 Jul, 2021 | 01:27 PM
image

 ஆர்.ராம்

 பயங்கரவாத தடுப்புச்சட்டமூலத்தினை எதிர்த்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வாக்களிக்கவில்லை.பயங்கரவாத தடுப்புச்சட்டமூலத்தை அறிமுகம் செய்தவர் அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம்;இந்த சட்டத்தின்கீழ் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகியோருக்கு எதிராக முதாலவது வழக்கைத் தாக்கல் செய்தவர்அப்போதைய சட்டமா அதிபர் சிவா பசுபதி 1979ஆம் ஆண்டுஜுலை 19ஆம் திகதி கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் அமுலாக்கப்பட்டு நாளைதிங்கட்கிழமை 19ஆம் திகதியுடன் 42வருடங்கள் முழுமை பெறுகின்றன.  

 இந்த நிலையில்,பயங்காரவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் மற்றும் நான்கு தாசப்தங்கள்கடந்த நிலையிலும் அது நீடிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்ட விடயங்கள்குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 

 1979ஆம் ஆண்டுபயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு அதன் கீழ் அப்போதைய சட்டமா அதிபரானசிவா பசுபதியினால் குட்டிமணி, தங்கத்துரை, தேவன் ஆகிய அரசியல் கைதிகளுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முதலாவது வழக்கான நீர்வேலி வங்கிக் கொள்ளையின்போது கொலை செய்யப்பட்ட பொலிஸ்உத்தியோகத்தர் சிவநேசன் வழக்கிலிருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்கொலை வழக்கு வரை நான்கு தசாப்தங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை கையாண்டு வருபவர்ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி;.தவராசா என்ற அடிப்படையிலேயே இந்த விடயம் சம்பந்தமாக அவருடன்கருத்துப்பகிர்வு மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களின்சாராம்சம் வருமாறு, 

  பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் முன்னோடிகள்

 1979ஆம் ஆண்டு48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்  சட்ட ஏற்பாடுகள் முன்னைய  சட்டங்களில்காணப்பட்ட ஏற்பாடுகளின் ஒத்த சில அம்சங்களைக் கொண்டுள்ளமை அவதானிக்கத்தக்கது.

 1972ஆம் ஆண்டின்குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த)சட்டம் மற்றும் 1978ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதனையொத்தஏனைய இயக்கங்கள் ஆகியவற்றை தடைசெய்யும்  சட்டம்  ஆகியவற்றில் காணப்பட்ட ஏற்பாடுகளின் சில அம்சங்களைஅவசரகால ஒழுங்கு விதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்ஏற்பாடுகளில் உள்வாங்கப்பட்டு பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது.

 பயங்காரவாத சட்டமூலமும் சட்டமியற்றும்செயற்பாடும்

 காலனித்துவ ஆட்சிகாலத்திலிருந்துஇந்நாட்டில் நிலவி வந்த ஆரோக்கியமான பாராளுமன்ற ஜனநாயக மரபுகளையும்  நீதித்துறையின் சுதந்திரத்தையும், மனதிற்கொண்டுபார்க்கும்போது, இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள்மிகவும் நியாயமாகவே உள்ளன. 

அச்சட்டத்தின்உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத்தன்மை மற்றும் அமுலாக்கலில்அதன் துஸ்பிரயோகம் ஆகியவற்றை வெளிப்படையாகவே காணமுடிகின்றது.   

குறிப்பாக நாட்டின்ஜனநாயக அமைப்புகளின் துரிதமான  மோசமடைதலை அதுவெளிச்சமிட்டுக் காட்டுகின்றமை மிகவும் துரதிஷ்டமான விடயமாகும். எந்தவொரு பயங்கரவாததடுப்புச் சட்டமும் பிரஜைகளுக்கெதிரானதாகும் என்பதோடு, ‘முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-07-18#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right