சி.அ.யோதிலிங்கம்
இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உட்பட 19ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக முல்லைத்தீவு கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காகவே இவர்கள் கைது செய்யபட்டு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுதலை செய்தது. தனிமைப்படுத்தல் உத்தரவை வழங்குமாறு பொலிஸார் கோரிய போதும் நீதிமன்றம் அதனை வழங்கவில்லை. நீதிமன்றம் வழங்காத நிலையில் பலவந்தமான தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அதுவும் கொழும்பில் பல இடங்கள் இருக்கத்தக்கதாக முல்லைத்தீவுக்கே கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்தில் அவர்களை ஏற்றும் போது பௌத்தமத குருமார் மீதும், பெண்கள் மீதும் அநாகரிகமாகவே பொலிஸார் நடந்து கொண்டனர். பெண் ஆசிரியரின் சட்டை கிழிக்கப்பட்டது. அதனை பாதிக்கப்பட்டவரே நேரடியாகக் கூறியிருக்கின்றார். பௌத்தமத குருவும் காலிலும் கையிலும் பிடித்து தூக்கி செல்லப்பட்டார் பௌத்த மத குருமாருக்கு மரியாதை கொடுக்கின்றோம் என்று கூறிக் கொள்;ளும் அரசு மோசமாக நடந்து கொண்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு மாற்றுடைகள் எடுப்பதற்கு கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எந்த தனிமைப்படுத்தல் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகின்றோம் என்பதும் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
தனிமைப்படுத்தல் முகாமிற்கு வரும் வரை போதுமான உணவு வகைகளும் வழங்கப்படவில்லை. இடையில் சிலாபத்தில் பாணும், வாழைப்பழமுமே உணவாக வழங்கப்பட்டது.
மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசேப் ஸ்ராலின் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ வசதிகளும் அதற்கான உணவு வசதிகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-18#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM