எதிர்வரும் தினங்களில் கூடும் கோப் குழு உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள்

By Vishnu

19 Jul, 2021 | 10:05 AM
image

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் தினங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.  

அதற்கமைய, இன்று (19) தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது. இன்று நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து தலைமையில் கூடவுள்ளது.

நாளை (20) வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார். 

அதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலும், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலும் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தலைமையிலும் கூடவுள்ளது. 

அதேவேளை, ஆகஸ்ட் 04 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 05 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது. மேலும், அன்றைய தினம் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அத தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூடவுள்ளது. 

அதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தலைமையில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது. 

ஆகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதாகவும், 19 ஆம் திகதி உயர் பதவிகள் பற்றிய குழு கூடவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39