அனுராதபுரம், ககட்டகஸ்திகிலியை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான இருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 61 மற்றும் 63 வயதுடையவர்கள் ஆவார்.

இலங்கையில் மனித-யானை மோதலால் ஆண்டுதோறும் சுமார் 300 யானைகள் மற்றும் 100 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.