மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி பகுதிகளில் சுவர் இடிந்து வீழ்ந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் தொகை மொத்தமாக 24 ஆக பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி செம்பூரில் 15 பேரும், விக்ரோலியில் ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் மும்பையில் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து, நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது. 

மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.