220 மீட்டர் அகலம் வரை இருக்கக்கூடிய மாபெரும் விண்வெளி பாறை பூமியின் சுற்றுப்பாதையை நோக்கி நகர்வதாக நாசா கூறியுள்ளது.

இது ஜூலை 24 சனிக்கிழமையன்று நமது கிரகத்திற்கு அண்மித்த வகையில் பூமியை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

'2008 GO20' என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுரத்தின் அளவிலும் இரு மடங்காகும்.

சிறுகோள் எதிர்வரும் ஜூலை 24 அன்று விநாடிக்கு சுமார் 8 கிலோமீட்டர் வேகத்தில் நமது கிரகத்தின் சுற்றுப்பாதையில் பாதுகாப்பாக பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இது நமது கிரகத்தை அண்மித்து கடந்து செல்லும் போது, அது பூமியின் மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவானது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.