இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரில் 1 : 0 என முன்னிலை பெற்றுள்ளது.

No description available.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இத் தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்றது. 

No description available.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.