நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த யுவதி மாயம் - தேடுதல் தீவிரம்

Published By: Digital Desk 4

18 Jul, 2021 | 08:49 PM
image

திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று (18) மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற குறித்த யுவதி ஒருவரே இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர் வீழ்ச்சியில் விழுந்து காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய 3 யுவதிகளும் திம்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

97 மீற்றர் பள்ளத்திலேயே குறித்த யுவதி விழுந்துள்ளதாகவும், யுவதியை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை திம்புளை – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 15:42:44
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40
news-image

தலசீமியா நோய் கட்டுப்பாடு மற்றும் நோயாளர்...

2026-05-21 14:38:31
news-image

பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கு...

2026-05-21 14:21:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தை சிறப்பாக...

2026-05-21 14:22:50