ஒலிம்பிக்கில் இலங்கையின் பெண் நடுவர்!

Published By: Digital Desk 4

18 Jul, 2021 | 09:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜப்பானில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் ரீ. நெல்கா ஷிரோமாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றவராவார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017  ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார். 

இந்த நிலையிலேயே தற்போது ஒலிம்பிக் போட்டிகளின் குத்துச் சண்டை நடுவராகவும்,  தீர்மானிப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22