கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

By Digital Desk 2

18 Jul, 2021 | 11:45 AM
image

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தயாராகிவரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் தொடங்கியிருக்கிறது.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கி, முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் 'உலக நாயகன்' கமலஹாசன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் 'மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, அனிரூத் இசையமைக்கிறார்.

கமலஹாசன் நடிப்பில் தயாராகி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று உறுதியான தகவல் வெளியாகாததாலும், கமல்ஹாசன் நடிப்பில் தயாராக இருந்த 'பாபநாசம் 2' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதில் குழப்பம் தொடர்ந்து நிலவி வருவதாலும், 'உலகநாயகன்' கமலஹாசன், ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற சொந்த பட நிறுவனத்தின் சார்பில் தயாராகும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்ற திட்டமிட்டார். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 232 வது படமான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. முதலில் 'உலகநாயகன்' கமலஹாசன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பங்குபற்றிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்றொரு முன்னணி நடிகரான பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பு குழுவினருடன் இணைவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மூலம் 'உலகநாயகன்' கமல்ஹாசன் பார்வைத்திறன் சவால் உள்ள வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பதும், முப்பதாண்டுகளுக்கு முன் ‘ராஜபார்வை’ என்ற படத்தில் கமல்ஹாசன் பார்வைத்திறன் சவால் உள்ளவர் வேடத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜெயிலர்' படத்தில் இணைந்த பொலிவூட் பிரபலம்

2023-02-06 13:48:02
news-image

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு

2023-02-06 13:28:04
news-image

சிம்ஹா நடிக்கும் 'வசந்த முல்லை' படத்தின்...

2023-02-06 13:27:24
news-image

கவின் நடிக்கும் 'டாடா' திரைப்படத்தின் முன்னோட்டம்...

2023-02-06 13:11:13
news-image

தான்யா ரவிச்சந்தினின் 'றெக்கை முளைத்தேன்' படத்தின்...

2023-02-06 13:05:51
news-image

லதா மங்கேஷ்கர் நினைவு தினம்: மணல்...

2023-02-06 12:26:17
news-image

தளபதி விஜய் கர்ஜிக்கும் 'லியோ'

2023-02-05 17:46:59
news-image

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங்...

2023-02-05 17:44:57
news-image

நடிகர் ஷாமை இயக்கும் விஜய் மில்டன்

2023-02-05 17:35:36
news-image

விஜய் சேதுபதி நடிக்கும் 'ஃபார்ஸி' வலைத்தள...

2023-02-05 17:19:03
news-image

இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

2023-02-05 14:30:53
news-image

'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி' வாணி...

2023-02-04 16:05:03