முன்னணி போதைப்பொருள் வர்த்தகம் 'கிம்புலா எலே குணா' என்பவருக்கு சொந்தமான சுமார் 12 கிலோ கிராம் ஹெரோயின் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதியானது சுமாமர் 120 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெருவில் பொலிஸ் விசேட அதிரடைப் படையின் நேற்றிரவு நடத்திய சோதனையின்போதே, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் இதன்போது கைதுசெய்யப்பட்டார்.

கைதான நபர் கிம்புலா எலே குணாவின் சகோதரர் என்பதும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான, பாதாள குழு தலைவர்களில் ஒருவரான, கிம்புலா எலே குணா தற்போது அங்கு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.