ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமியின் மரணம் : விசாரணையில் திருப்பம்

17 Jul, 2021 | 10:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர் )

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும்  16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், பொரளை பொலிஸாரும் இணைந்து இந்த தீவிர  புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

May be an image of 2 people and people standing

இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் - டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி விவகாரத்தில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று  உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால்   விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

இந் நிலையில்  பலத்த  தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

 இதனையடுத்து  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, வழக்கிலக்கம் பீ/52944/2/21 இற்கு அமைய, உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

Image

அதன்படி ஹிஷாலினியின் சடலம் மீதான பரிசோதனைகள்  கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக்  இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த  நிலையில்,  வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி,  விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக்,  3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான  சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான  சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.

இந் நிலையிலேயே ஹிஷாலினி விவகாரத்தில் இருவேறு விடயங்களை மையப்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா, அவர் வீட்டு வேலைக்காக சேர்க்கப்படும் போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: துப்பாக்கிச் சூடு...

2026-07-16 06:06:05
news-image

மாகாண சபைக தேர்தல் முறை குறித்து...

2026-07-16 06:01:13
news-image

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக குறைந்த...

2026-07-16 05:54:15
news-image

பலவந்தத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு...

2026-07-16 05:50:51
news-image

ஊழியர் நிதியங்களை ஒன்றிணைத்து தனியார்மயமாக்க போவதாக...

2026-07-16 05:43:47
news-image

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் எம்.பி. சாணக்கியன் சந்திப்பு

2026-07-16 05:40:55
news-image

சிறைச்சாலைச் சட்டங்களில் மாற்றம் குறித்து அரசு...

2026-07-16 05:35:52