ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை வீர வீராங்கனைகளுக்கு ரணில் வாழ்த்து

By Digital Desk 2

17 Jul, 2021 | 07:08 PM
image

நா.தனுஜா

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் அனைத்துப் போட்டியாளர்களும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குரிய சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றவேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் குறித்தவொரு நாட்டைச்சேர்ந்த போட்டியாளர்களுக்கு தொற்று ஏற்படும்பட்சத்தில், அது ஏனைய நாடுகளின் போட்டியாளர்களையும் பாதிக்கும் என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கின்றார்.

 

அதேவேளை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right