தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான  முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ள ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்

Published By: Digital Desk 2

17 Jul, 2021 | 06:24 PM
image

நா.தனுஜா

தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும் தகவல்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் தனிப்பட்ட தரவுப்பாதுகாப்புச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 5 முக்கிய பரிந்துரைகளை ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு முன்வைத்திருக்கின்றது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக, தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி தயாரிக்கப்பட்ட இச்சட்டமூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டவரைஞர் திணைக்களத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டது.

 

இந்நிலையில் மேற்படி உத்தேச சட்டமூலத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான 5 பரிந்துரைகளை உள்ளடக்கியதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும் தகவல்களின் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்றவகையில் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய பரிந்துரைகளை முன்வைக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது.

இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் உள்ள பிரஜைகளுக்கான ஓர் கருவியாகவும் ஆயுதமாகவும் தகவல்கள் மாறிவரும் இன்றைய சூழலில் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கான சட்டக்கட்டமைப்பொன்றை உருவாக்குவது மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் பயணத்தில் ஓர் மைல்கல்லாக அமையும் என குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08