இலங்கை - இந்திய அணிகள் மோதும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

Published By: Digital Desk 2

17 Jul, 2021 | 02:12 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஷிகர் தவான தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் மோதும் 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின்போது, இலங்கை அணித்தலைவராக நியமிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக இப்போட்டித் தொடரில் பங்கேற்க முடியாது போயுள்ளது.

ஆகையால், இலங்கை  கிரிக்கெட் அணிக்கு சகலதுறை வீரரான தசுன் சானக்கவின் தலைமையில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஜூலை மாதம் 13 ஆம் திகதி  ஆரம்பமாகவிருந்தபோதிலும், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தம்மை ஈடுபத்திக்கொண்டிருந்ததால், பயிற்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இப்போட்டித் தொடர் இம்மாதம் 18 ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 165 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 91 போட்டிகளிலும் இலங்கை 56 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. 

ஏனைய போட்டிகளில் ஒரு போட்டி சமநிலையிலும் 11 போட்டிகளும் முடிவற்ற போட்டிகளாக அமைந்துள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கி‍டையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள்  போட்டித் தொடர் 18 , 20, 23 ஆம் திகதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்  போட்டித் தொடர் 25,27, 29 ஆம் திகதிகளில் இரவு 8 மணிக்கும் ஆரம்பமாகும்.

இந்த அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35