முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் விடுவிப்பு

16 Jul, 2021 | 09:38 PM
image

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரடங்கிய குழுவினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 8 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு. பிணையில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை கொரோனா சுகாதார வழிகாட்டல்களை காரணம் காட்டி தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். 

இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரை தனிமைப்படுத்தினர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், ஆசிரியர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், 8 நாட்களின் பின்னர், முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து அவர்கள் அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல்லேகலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் கடந்த 7 ஆம் திகதி பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டனர். 

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று (16) அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08