மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள  அம்பிளாந்துறை வெல்லாவெளி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் மாட்டுகளுடன் கன்ரர் ரகவாகனம் மோதிய விபத்துக்குள்ளானதில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன் 12 மாடுகள் படுகாயமடைந்த  சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை  இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீதியால் சம்பவதினமான இன்று அதிகாலை கன்ரர் ரக வாகனத்தில் கல் ஏற்றிக் கொண்டு வேகமாக  பயணித்த போது வீதியில் குறுக்காக நின்ற மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒரு மாடு உயிரிழந்ததுடன் 12 மாடுகள் படுகாயமடைந்தன.

இதனையடுத்து குறித்த வாகனத்தை பொலிசார் கைப்பற்றி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்