(நா.தனுஜா)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுபவம்வாய்ந்த உறுப்பினர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் விவாதிப்பதற்கு விசேட பாராளுமன்ற அமர்வைக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகியோர் இணைந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மிகக்குறுகிய காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையின் பின்னணி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அண்மையில் எதிர்க்கட்சி தெரிவித்திருந்த பின்னணியிலேயே இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு ஒரு சுயாதீன அமைப்பு என்பதுடன் அதன் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்வதற்கான சுதந்திரத்தையும் அரசியலமைப்பு வழங்குகிறது.
மேலும், தேர்தல் ஆணைக்குழுவில் ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான நடைமுறைகள் சாதாரண பொதுச்சேவை விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவையாகும்.
அதன் பிரதான நோக்கம் யாதெனில், அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுயாதீனமாகச் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதோடு தேர்தல் துறைக்குள்ளேயே அல்லது ஆணைக்குழுவினுள் தேர்தல்களை நடத்துவதற்கான விசேட நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் நிலைநிறுத்திக்கொள்வதேயாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM