இணையத்தில் 15 வயது சிறுமி விற்கப்பட்டமை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய மகளிர் சக்தி இன்று (16.07.2021) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவருமான உமாசந்திரா பிரகாஷ், ஐக்கிய மகளிர் சக்தியின் செயலாளர் நிரூபா உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் முக்தார் பிளாசாவில் அமைந்துள்ள இலங்கைப் பொலிஸின், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு சென்று குறித்த முறைப்பாட்டை கையளித்தனர்.