பெட்னா நிறுவனத்தின் மற்றுமொரு சமூக சேவையாக, நாட்டினுள் நிலவுகின்ற அசாதாரண சூழலின் காரணமாக கலைத்துறைக்குப் பெரும் சேவையாற்றிய, தமது கலைத்துறை நடவடிக்கைகளுக்கு முறையாக ஈடுபட முடியாத ஏராளமான கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது சேவையை பாராட்டும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 2021.06.23 ஆம் திகதி இடம்பெற்றது. 

சமூக சேவைகளை முன்னின்று நடாத்தும் ஒரு முதன்மை நிறுவனமாக பெட்னா நிறுவனத்தைக் குறிப்பிடலாம்.  பெட்னா அருனெல்ல, பெட்னா சஹஷ்ரயே எய என்பன அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான நிகழ்வுகளாகும்.

அதற்கேற்ப, கலாஷுரி சதிஷ்சந்ர எதிரிசிங்ஹ அவர்கள் உட்பட மிஹிந்து கலாசார ஒழுங்கமைப்பு ஒன்றிணைந்து, களனிப் பிரதேசத்தை மையமாக கொண்டு, உதவிப் பணிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், நடனக்கலைஞர்கள், வானொலிக் கலைஞர்கள் உள்ளடங்கலாக ஏராளமான கலைஞர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டன. 

எமது நாட்டுப் பொருட்களுக்கு முதலிடம் அளிக்கும் Fadna நிறுவனமானது பல தசாப்த காலமாக எமது பாட்டன்கள் சிறந்த வாழ்க்கை முறையை வாழ்வதற்கு பயன்படுத்திய இயற்கை குணநலன்கள் நிரம்பிய பரம்பரைப் பரம்பரையாக உபயோகப்படுத்தும் முறையை நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏராளமான புதிய உற்பத்திகளாக பெற்றுக்கொடுக்கும் உள்நாட்டு நிறுவனமாகும்.