நாட்டை அபிவிருத்திச் செய்யும் பொழுது இனமத வேறுப்பாடுகள் கருத்திற்கொள்ளப்படாது. எனவே வட.கிழக்கை  அபிவிருத்திச் செய்ய அரசாங்கம் என்ற வகையிலேயே செயற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். 

அனைத்து சமூகங்களும் ஒன்றினைந்து நாட்டை அபிவிருத்திச் செய்யும் நோக்கத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடந்த காலத்தில் முழுமையாக அழிவடைந்த வடகிழக்கு பிரதேசங்கள் தொடர்பாக தற்பொழுது விசேட அவதானத்தை செலுத்தியுள்ளார்கள் என்றார். 

இக்குறிக்கோளை அடையும் பொருட்டு இனமத பேதங்களை கருத்திற் கொள்ளாது அனைத்து மக்களையும் ஒன்றினைக்க வேண்டிய தேவை தற்பொழுது மேலேழுந்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்பாணத்தில் வணிக கப்பற்றுறை செயலகத்தின் கிளை காரியாலயத்தை  திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.