சவுதி அரேபியாவை சேர்ந்த 78 வயதுடைய முதியவர் ஒருவர்  16 பெண்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கு 37 குழந்தைகள் இருப்பதகவும் பெருமைபட தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவை சேர்ந்தவர்  முஹகமது பின் ஹோஸ்னி அல் சிம்ரணி (வயது 78) ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இவர் சவுதி செய்தி இணையதளமான சபக்கிடம்  இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

எனது 14 ஆவது வயதில் முதல் திருமணம் செய்து கொண்டேன். 2 வருடத்திற்கு பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு  மற்றொரு பெண்ணை திருமணம் செய்தேன். இப்படியாக ஆரம்பித்த தொடர் திருமணங்கள் தற்போது 16ஆகி விட்டது.

எனக்கு 21 மகன்கள் 16 மகள்கள் உள்ளனர். மேலும் 50 பேரக்குழந்தைகள் உள்ளனர். சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களையே திருமணம் செய்து உள்ளேன் என்றார்.

ஹோஸ்னி தென்மேற்கு மாகாணமான அசிரில் உள்ள பிஷாக்கில் வாழ்ந்து வருகிறார். இவர் எப்பொழுதும் 4 மனைவிகளுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இஸ்லாத்தின் சட்டத்தை  கடைபிடித்து வந்துள்ளார்.

இவரது முன்னாள் மனைவிகள் இறந்துள்ளனர் அல்லது விவாகரத்து பெற்றுள்ளனர்.

ஹோஸ்னியின் இந்த தொடர் திருமணத்திற்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர் தனது சொந்த சந்தோஷத்திற்காக மாத்திரமே வாழ்ந்துள்ளார். மனைவிகளின் நலன் மேல் அக்கறை கொண்டது இல்லை என கூறியுள்ளனர்.