(இராஜதுரை ஹஷான்)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து ஆளும் தரப்பின் மத்தியிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. 

இதன் காரணமாகவே  சட்டமூலம் நிறைவேற்றாமல் பிற்போடப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் சட்டமூலத்தை  நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்  என கைத்தொழில் வளங்கள்   அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அம்பாறையில் இடம் பெற்ற நிகழ்வின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக  சட்டமூலம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.  

கடந்த 8 ஆம் திகதி இச்சட்டமூலம்  பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.  ஆளும் தரப்பிற்குள் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இச்சட்டமூலத்தை நிறைவேற்றல் பிற்போடப்பட்டுள்ளது என்றார்.