ரிஷாப் பந்திற்குப் பின்னர், இந்திய கிரக்கெட் உதவிப் பணியாளர்களில் ஒருவரான தயானந்த் கரணி கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

One unnamed member of the Indian coaching staff has tested positive for COVID - report.

இதனால் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாக கருதப்படும் விருத்திமான் சஹா,  பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் காத்திருப்பு தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நான்கு நபர்களும் லண்டனின் உள்ள டீம் ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அதேநேரம் பயிற்சி நடவடிக்கைகளுக்காக டர்ஹான் சென்றுள்ள ஏனை அணி வீரர்களுடன் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பின்னர், இந்திய அணி மூன்று வார இடைவெளியில் இங்கிலாந்தில் தங்கியுள்ளனர்.

கொவிட்-19 டெல்டா மாறுபாட்டு பரவல்கள் அதிகளவில் இங்கிலாந்தில் இருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு வெளியில் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் யூரோ மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் சில இந்திய வீரர்கள் பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்தனர். 

உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உட்பட முழு இந்தியக் கிரிக்கெட் குழுவுக்கும் இந்த மாத தொடக்கத்தில் லண்டனில் இரண்டாவது டோஸ் கொவிட் தடுப்பூசி மூலம் வழங்கப்பட்டது. 

மேலும் ஆபத்துகளைத் தணிக்க, இந்தியக் குழு தினசரி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.